Today Tamilnadu News 2023

இந்தியாவிலே முக்கியமான புனித தலங்களில் தமிழகத்திலே உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரமும் ஒன்றாகும். இங்குள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ராமேஸ்வரத்தில மொத்தம் 64 தீர்த்தங்கள் உள்ளது. அந்தவகையில், ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இன்று காலையில் பக்தர்கள் கடலில் நீராடி கொண்டிருக்கும் போது, திடீரென அக்னி தீர்த்த கடற்கரையில் கடல் நீர் சுமார் 50 அடி தூரம் உள்வாங்கியது. மேலும், கடலுக்குள் இருந்த பாறைகள் எல்லாம் வெளியே தெரிந்தன. இதனால் அங்கிருந்த பக்தர்கள் பயந்து அலறியடித்து ஓடினர்.
இதுகுறித்து, மத்திய கடல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், அக்னி தீர்த்த கடலில் இதுபோன்று கடல் நீர் உள்வாங்குவது ஒன்றும் புதிதானது அல்ல. இதற்கு முன்பு கடல் நீர் உள்வாங்கும் பிறகு எப்பவும் போல கடல் நீர் இயல்பு நிலைக்கு மாறிவிடும். தற்போது உள்ள காலநிலை மாற்றத்தால் கூட கடல் நீர் உள்வாங்கி இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
நன்றி
Publisher: jobstamil.in