ரேஷன் கார்டுதாரர்களுக்கு புதிய அறிவிப்பு-பண்டிகையை முன்னிட்டு மானிய விலையில் பரிசு!
ரேஷன் கார்டு திட்டம் ஏழை, எளிய மக்கள் பயனடையும் நோக்கில் உருவாக்கப்பட்டது. மாநில அரசுகள் நிறைய சலுகைகளை வழங்கி வருகிறது. இதில் நிறைய மக்கள் பயனடைகிறார்கள்.
எனவே ரேஷன் கார்டுதாரர்களுக்கு துர்கா பூஜையை முன்னிட்டு மானிய விலையில் பரிசுகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
திரிபுரா மாநிலத்தில் துர்கா பூஜையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டு காரர்களுக்கும் மானிய விலையில் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. திரிபுரா உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் சுஷாந்த சவுத்ரி நேற்று இந்த திட்டத்தை அறிவித்திருந்த நிலையில் இன்று திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா இதனை தொடங்கி வைக்க உள்ளார்.
Also Read >> ஹேப்பி நியூஸ்! முதியோர் ஓய்வூதியம் இனி ரூ.3000 ஆக உயர்த்தப்படும்! அதிரடியாக அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்…!
இதற்கு முன்னர் ரேஷன் கடைகளில் ஒரு லிட்டர் கடுகு எண்ணெய் 128 ரூபாய்க்கு வழங்கப்பட்டது. ஆனால் இன்று அரசு அறிவிப்பின்படி ரேஷன் கடைகளில் வழங்கும் பரிசுத் தொகுப்பில் ஒரு லிட்டர் கடுகு எண்ணெய் ரூபாய் 113 வழங்கப்பட உள்ளது. மேலும் ஒரு கிலோ சர்க்கரை, அரை கிலோ ரவா, இரண்டு கிலோ மாவு போன்ற இதர பொருட்களும் வழங்கப்படும்.
மேலும் அரசு பரிசு தொகுப்பினை மக்கும் கேன்வாஸ் பைகளின் மூலம் வழங்க ஏற்பாடு செய்துள்ளது. அதற்காக 3.58 லட்சம் பைகள் தற்போது வந்து இருப்பதாக அரசு கூறியுள்ளது. மேலும் அமைச்சர் இத்திட்டம் 9 லட்சம் பேரை சென்றடையும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சர் வரும் ஆண்டுகளில் உணவு மற்றும் சிவில் சப்ளை துறையின் கீழ் ஏற்றுதல், இறக்குதல் மற்றும் இதர பணிகளில் ஈடுபட்டுள்ள 635 தொழிலாளர்களுக்கு கருணைத் தொகையாக ரூபாய் 2000 வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அரசின் இந்த பரிசுத்தொகுப்பினால் மிகுந்த மகிழ்ச்சியில் மக்கள் உள்ளனர்.
நன்றி
Publisher: jobstamil.in