ஆரவ் – ஓவியாவில் ஆரம்பித்த பிக்பாஸ் காதல், கவின் – லாஸ்லியா, அமீர் – பாவனி வரை அட்ராசிட்டி செய்தது. இந்நிலையில், சீசன் 7இல் அப்படி யாராவது சிக்குவார்களா என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். 19 வயது இளம் புயலான ரவீனாவையும், நடனக் கலைஞர் மணிசந்திராவையும் ஆரம்பத்திலேயே கோர்த்து விட்டு ட்ரோல் செய்யும் அளவுக்கு கன்டென்ட் கொடுத்திருந்தனர். ஆனால், இப்போ கதையே மாறிடுச்சு என்பது தான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக மாறியுள்ளது.
ரவீனா வெளியே மணிசந்திராவுடன் சுற்றி வந்த போட்டோக்களும் டிரெண்டாகி வரும் நிலையில், இருவரையும் காதல் ஜோடியே என்றே முடிவு செய்தனர். கையில் எழுதி மறைமுகமாக மணிசந்திராவுக்கு ரவீனா காட்டுவது, மணியின் கையை கடித்து விளையாடுவது என எல்லை மீறி செல்கிறார் என பிக்பாஸ் ரசிகர்கள் கம்ப்ளைண்ட் செய்யும் அளவுக்கு இருவரும் சென்ற நிலையில், . மணியின் கையை ரவீனா கடித்து விளையாடுவது, தன்னுடைய லிப்ஸ்டிக் ஒட்டிக் கொண்டதாக அதை எடுத்து கன்னத்தில் தடவி துடைத்தது எல்லாம் ரசிகர்களை காதல் ஜோடி என்றே கதை கட்ட தோன்றியது.
இந்நிலையில், அதெல்லாம் கிடையாதுங்க நாங்க அண்ணன் தங்கச்சி தான் என பாசமலர் கதையை புதிதாக ரவீனா ஓட்ட ஆரம்பித்து விட்டார். மணி அண்ணா என திடீரென ரவீனா அழைத்து வருவதை கேட்டு ரசிகர்களே ரவீனா கொய்ங் கொய்ங் குரலில் ஏதாவது பிரச்சனை இருக்கா? என்றே டெஸ்ட் செய்து பின்னர், அவர் மணி அண்ணா என்று தான் அழைக்கிறார் என்பதை உறுதி செய்துள்ளனர். அடுத்து ஐஷு, அராத்தி, அனன்யா, ஜோவிகா உள்ளிட்டோர் யார் மீதாவது காதலில் விழுகிறார்களா என்பதை வெயிட் பண்ணி பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.
நன்றி
Publisher: 1newsnation.com