இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து முழுவீச்சில் அரசு இயந்திரத்தைக் களத்தில் இறக்கியிருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை. தலைநகரிலிருந்தோ, களத்திலிருந்தோ கண்காணிக்க வேண்டிய முதலமைச்சர் ஸ்டாலின் கோவையில் அரசு விழாவை நடத்திக் கொண்டிருக்கிறார். அது மக்களுக்கான விழாதான். ஆனால், கொட்டுகிற மழையில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து, துன்பத்தோடும் துயரத்தோடும் மக்கள் தத்தளிக்கும்போது அவர்களை விட்டுவிட்டு, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறேன் என்று விளம்பரம் தேடுவதில் தி.மு.க அரசு கவனம் செலுத்துகிறது என்பதற்கு, இது ஒரு சாட்சி.
கோவையில் நடந்த இந்த விழாவை ஒரு நாள் தள்ளிவைத்தால், குடி முழுகிப் போகாது என்று மக்கள் சொல்கிறார்கள். ஆகவே களத்தில் செய்ய வேண்டிய பணிகளை மறந்துவிட்டு, விளம்பரத்துக்காக அரசு நிகழ்ச்சியை நடத்துவதில்தான் முதலமைச்சர் கவனம் செலுத்துகிறார்.
இன்றைக்கு அரசு இயந்திரம் அந்தப் பகுதிகளில் முழுமையாகச் செயல்படுகிறதா என்கிற கேள்வி எழுகிறது. மீட்புப் பணிகளுக்குத் தேவையான படகுகள் அங்கு இல்லை என்றும் பள்ளிக் கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு அவைகள் நிவாரண முகாம்களாக தயார் செய்யப்பட்டிருக்கின்றனவா என்ற கேள்வியும் எழுகிறது.
நன்றி
Publisher: www.vikatan.com