இலங்கையிலிருந்து நவீன இழுவைக் கப்பல் வந்தாலும், பணிகளைத் தொடங்க முடியவில்லை. அதனால் மேலும் ஒரு அதிநவீன இழுவை படகை கொழும்பு துறைமுகத்திலிருந்து நாளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னரே மீட்புப் பணிகள் தொடங்கும் என மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
கூடங்குளம் கடல் பகுதியில் மிதவைக் கப்பல் பாறை இடுக்கில் சிக்கி ஏழு நாள்கள் ஆகிவிட்டபோதிலும், இதுவரை மீட்க முடியாத நிலையில், அதற்கான பணிக்காக இலங்கையிலிருந்து கப்பல் மற்றும் படகு வரவழைக்கப்படுவது குறித்து கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன், “சூப்பர் பவரிடம் இல்லாதது சுண்டைக்காய் பவர் இலங்கையிடம் இருக்கிறதா?” என கிண்டல் தெரிவித்து இணையத்தில் பதிவிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com