தமிழகத்திலுள்ள மங்களூர் ரிஃபைனரி மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட் (MRPL) நிறுவனத்தில் Retal Outlet Dealers ஆக பணிபுரிய ஆட்தேர்வு நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்திலுள்ள Mangalore Refinery and Petrochemicals Limited நிறுவனத்தில் Retai Outlet Dealers பணிபுரிய ஆட்தேர்வு திண்டுக்கலில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார். அதில் முன்னாள் படைவீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘CC” குறிப்பிடப்பட்டிருக்கும் பிரிவுகளில் தகுதியான முன்னாள் படைவீரர்கள் ஆன்லைன் மூலமாக www.mrpl.co.in என்ற இணையதள முகவரியில் 30.10.2023 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க
இப்பணிடத்திற்கு விண்ணப்பிக்கும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பித்த ஆவணங்களின் (Hard Copy ) நகலை திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
நன்றி
Publisher: tamil.news18.com