இதுகுறித்து நம்மிடம் பேசிய சீனியர் கதர்கள், “ஏபிவிபி, தெலுங்குதேசம் கட்சிக்களில் இருந்தவர்தான் ரேவந்த் ரெட்டி. கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்குதேசம் கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தார். ராகுல் காந்தியுடனும், கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோருடன் நல்ல நெருக்கத்தில் இருக்கிறார். மேலும் அவரின் செல்வாக்கு மற்றும் கடும் உழைப்பை பார்த்த காங்கிரஸ், கே.சி.ஆருக்கு இணையாக ரெட்டியையே முன்னிறுத்தி செக் வைத்தது.
தலைமையின் நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறார். இதேபோல் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையும் காங்கிரஸ் தலைவர்களையும், தொண்டர்களையும் ஒன்றிணைப்பதில் முக்கியப் பங்காற்றியது. மேலும் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த சுனில் கனுகோலு, தெலங்கானா தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் வியூகங்களை வகுத்து கொடுத்தார். அதுவே இந்த சாதனைக்கு காரணம்” என்கிறார்கள். தெலங்கானாவில் தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை என்றாலும், பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com