மணிப்பூரில் ஏற்பட்டிருக்கும் அமைதியின்மையைப் பயன்படுத்திக்கொள்ள வெளிநாட்டுச் சக்திகள் ஆர்வமாக இருக்கலாம். தென்கிழக்கு ஆசியாவின் புவிசார் அரசியலுக்கும் இந்த நிகழ்வுகளில் பங்கு இருக்கிறதா எனப் பல கேள்விகள் எழுகின்றன. அமைதியை மீட்டெடுக்கும்போது ஏற்படும் பல சம்பவங்கள் சமூகங்களுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்துகின்றன. இது போன்ற செயல்களைச் செய்தவர்களின் பின்னணியில் இருப்பது யார்… வன்முறையைத் தூண்டுவது யார்… ஒற்றுமையை விரும்புபவர்கள் ஆங்காங்கே நடக்கும் நிகழ்வுகளால் மனம் தளராமல் அமைதியாகவும், நிதானத்துடனும் பணியாற்ற வேண்டும்.
தாய்நாட்டின்மீதான பக்தி, முன்னோர்கள்மீதான பெருமை, பொது கலாசாரம் ஆகிய மூன்று கூறுகளும் மொழி, வாழும் பகுதி, மதம், பிரிவு, சாதி, கிளை சாதி ஆகிய அனைத்து வேறுபாடுகளையும் ஒன்றிணைத்து நம்மை ஒரே தேசமாக்குகின்றன. இந்தியாவுக்கு வெளியிலிருந்து வந்த நம்பிக்கைகளும் இந்தக் கூறுகளை நிலைநிறுத்த வேண்டும். கலாசார மார்க்சிஸ்டுகள் அராஜகம், குழப்பம் மற்றும் ஊழலை ஊக்குவித்து அதிகப்படுத்துகின்றன. ஊடகங்கள், கல்வித்துறை மற்றும் பிற துறைகளில் அவர்களின் செல்வாக்கு மூலம், அவர்கள் சமூக ஒழுங்கு, ஒழுக்கம், கலாசாரம், கண்ணியம் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றைச் சீர்குலைக்க முற்படுகின்றனர்.
நன்றி
Publisher: www.vikatan.com