இன்று நாடு முழுவதும் 75-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கொடியேற்றி முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றார். இதனிடையே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகம் உள்ள நாக்பூரில் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.
அப்போது அவர், “இந்திய மக்களின் வலிமை எல்லையற்றது. இந்த வலிமை உயரும்போது, அது பல்வேறு அற்புதங்களைச் செய்து காட்டுகிறது. இன்று நாம் ஒவ்வொரு துறையிலும் முன்னேறி வருகிறோம். கட்டுப்பாட்டால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும். நாம் ஒவ்வொருவரும் நமது திறமைகளை அனைவரின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும், ஏனென்றால் ஒவ்வொருவரும் நம்முடையவர்கள். நாம் பார்க்க வித்தியாசமாகத் தோன்றினாலும், நம் நாட்டில் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் பாரம்பரியம் உள்ளது. நாம் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும், அரசியலமைப்பின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும். அப்போதுதான் நாடு முன்னேற்றத்தை நோக்கி செல்லும்” என்று தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com