மேலும், ரஷ்யா – வடகொரியா நாடுகளின் சந்திப்பை பொருத்தவரை, தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளில் தளர்வு மற்றும் ஆயுத வளர்ச்சிக்கு இரண்டு நாடுகளும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அதைத் தொடர்ந்து, வடகொரிய அதிபர் தெரிவித்ததாக அவரது மொழிப்பெயர்ப்பாளர் மூலம் வெளியான தகவலில், “ரஷ்யா தனது இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த மேலாதிக்க சக்திகளுக்கு எதிராக ஒரு புனிதமான போராட்டத்தை நடத்தி வருகிறது. எனவே, இரு நாடுகளும் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ஒன்றாகப் போராடும். ரஷ்ய அதிபர் புதின் மற்றும் ரஷ்ய தலைமையின் முடிவுகளை நாங்கள் எப்போதும் ஆதரிப்போம். ரஷ்ய அதிபரின் வேலைப்பளு அதிகம் இருந்தாலும், என்னை சந்திக்க வந்ததில் மகிழ்ச்சி. அவரின் வருகைக்கு நன்றி” எனக் கூறியதாக குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் “வடகொரியாவின் செயற்கைக்கோள் தொழில்நுட்ப திறனை மேம்படுத்த ரஷ்யா உதவும்” என்று புதின் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com