சவுதி அரேபியாவின் நிறுவனர் பெயரிடப்பட்ட கிங் அப்துல் அஜிஸ் அரேபிய குதிரை மையம் அந்நாட்டு சுற்றுச்சூழல், நீர் மற்றும் விவசாய அமைச்சகம் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது. ரியாத்தின் தென்மேற்கில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த மையம் 1 மில்லியன் சதுர மீட்டர் விவசாய நிலத்தில் 1961-ம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது.
இந்த மையம் அசல் அரேபிய குதிரைகளின் தாயகமாக உள்ளது. தூய பாலைவனத்தில் வளர்க்கப்பட்ட அரேபிய குதிரைகளின் பாரம்பரியத்தை பாதுகாக்கவே இந்த வசதி உருவாக்கப்பட்டு தற்போதும் இயங்கி வருகிறது. இந்த மையம் உலக அரேபிய குதிரை அமைப்புகளில் ராஜ்யத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மேலும் குதிரைகளின் நலன், பதிவு மற்றொரு இயக்கம் தொடர்பான சர்வதேச வசதிகளை கொண்டுள்ளது.
தற்போது இந்த இனங்களின் இனப்பெருக்கத்தை மேம்படுத்துவதற்காகவும், குதிரைகளை பாதுகாக்கவும் அந்நாட்டு அரசு பல புதிய மற்றும் கடுமையான சட்டங்களை உருவாக்கியுள்ளது. அதன் படி, உரிமம் இல்லாமல் குதிரைகளை ஏலம் எடுத்தால் சவுதி அதிகாரிகள் 5,00,000 ரியால்கள் ( இந்திய மதிப்பில் ரூ.1,10,80,919) வரை அபராதம் விதிக்கப்படும். சட்டவிரோத ஆன்லைன் ஏலத்திற்கான அபராதம் 1,00,000 ரியால்கள்.
குதிரைப் பந்தயத்தை நடத்துபவர்கள் விதிகளை மீறினால், அமைப்பாளர்களுக்கு அதிகபட்சமாக 5,00,000 ரியால் அபராதம் விதிக்கப்படும். போட்டிகளை ஏற்பாடு செய்யும் போது குதிரைகளின் பாதுகாப்பிற்கு தேவையான சேவைகளை வழங்க தவறினால் 3,00,000 ரியால் அபராதம் விதிக்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது. விவசாய அமைச்சகத்தின் இந்த அறிவிப்பு விலங்குகளின் சிறந்த இனங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நன்றி
Publisher: www.vikatan.com