இந்த விசாரணையில் உச்ச நீதிமன்றம் போலீஸார் நடவடிக்கைக்கு கடுமையாக கண்டனம் தெரிந்திவித்திருந்தது. மக்களை கம்பத்தில் கட்டி வைத்து அடிக்க போலீஸாருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. நீதிபதிகள் கவாய் மற்றும் மேத்தா , மக்களை கம்பத்தில் கட்டி வைத்து அடிக்க சட்டப்படி உங்களுக்கு அதிகாரம் இருக்கிறதா? என்றும் இதுபோன்ற செயல்களைச் செய்ய காவல்துறையினருக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இருக்கிறதா என்றும் கண்டித்தர்.
“காவல் துறைக்கு ஒரு கிரிமினலைக் கைது செய்ய அதிகாரம் இருக்கிறது. அவரிடம் விசாரணை நடத்தி குற்றப் பின்னணியைப் பெறலாம். ஆனால் அதேவேளையில் அந்த நடவடிக்கையின்போது அடித்துத் துன்புறுத்தி மூன்றாம் நிலை தண்டனைகளை வழங்கக் கூடாது” என்று உச்ச நீதிமன்றம் 1996-ல் வழங்கிய ஒரு தீர்ப்பை மேற்கோள் காட்டிய நீதிபதிகள், “சட்டத்தை அறிந்து கொள்ளாமல் காவலர்கள் செய்த குற்றத்தை வைத்து அறியாமையில் செய்துவிட்டார்கள் என்று வாதிட முடியாது. ஒவ்வொரு காவலரும், காவல் அதிகாரியும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் என்னவென்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்” என்றனர்.
அப்போது காவலர்கள் தரப்பு வழக்கறிஞர், “ஏற்கெனவே அந்த 4 காவலர்களும் கிரிமினல் வழக்கு விசாரணை, துறை ரீதியான விசாரணை மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை வளையங்களில் இருக்கின்றனர் அதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும்” என்று வாதிட்டார். இதனை ஏற்ற நீதிபதிகள், குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com