இறுதியில், இந்த வழக்கு இந்துமதிக்கு சாதகமானதாகச் சொல்லப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் கடந்தபோதும், அவரை ஊராட்சி மன்றத் தலைவராக ஏற்காமல், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மிரட்டல் விடுத்துவந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘இந்துமதியை திடீரென காணவில்லை’ என்று ஆம்பூர் தாலுகா காவல் நிலையத்தில் அவரின் கணவர் பாண்டியன் இன்று புகாரளித்திருக்கிறார். அவர் கொடுத்த மனுவில், ‘‘எனது, சொந்த ஊர் நாயக்கனேரி ஊராட்சியிலுள்ள காமனூர் தட்டு கிராமம். என் மனைவி இந்துமதிக்கு வயது 25. கடந்த ஊராட்சி மன்றத் தேர்தலில், எஸ்.சி கோட்டாவில் அன்னபோஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாங்கள் எஸ்.சி வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால், எதிர்தரப்பு ஆட்கள், எங்களைச் சார்ந்த 9 குடும்பங்களையும் ஊரைவிட்டு தள்ளிவைத்துவிட்டனர். அவர்கள் தொடர்ந்து, பிரச்னை செய்துவந்தனர். பிறகு, நாங்கள் சோலூரில் டி.பி.ஆர் கல்யாண மண்டபம் எதிரில், வீடு வாடகைக்கு எடுத்து வசித்துவருகிறோம். இந்த நிலையில், ‘நாங்கள் எஸ்.சி வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை’ என நீதிமன்றத்தில், எதிர்தரப்பினர் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கிலும், எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கடந்த 9-ம் தேதி மாலை 5 மணியளவில் என் மனைவி இந்துமதி, பால் வாங்குவதற்காக கடைக்குச் சென்றார். ஆனால், அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. முன்னாள் தலைவர் சிவகுமார், நாராயணன், நாகராஜ், பூபதி, பாபு, செல்வராஜ் ஆகிய 6 பேர் மீதுதான் சந்தேகம் இருக்கிறது. அவர்கள்தான் எங்களை எதிர்த்துச் செயல்பட்டவர்கள். எனவே, காணாமல்போன என் மனைவி இந்துமதியை கண்டுபிடித்துக் கொடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.
இந்த விவகாரம் அந்தப் பகுதியில் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com