இன்று எங்கோ ஓர் ஓரத்தில் கொண்டாடிக் கொண்டிருக்கும் நாம் இந்நாளை, அரசு விழாவாகக் கொண்டாடுவோம் என உறுதி ஏற்போம். தமிழ்நாட்டுக் கொடியை ஒருநாள் கோட்டையில் ஏற்றுவேன். தெருவெங்கும் பறக்க விடுவேன். இது வெற்று பேச்சு அல்ல, வெற்றி பேச்சு” என ஆவேசமாகப் பேசினார் சீமான்.
தொடர்ந்து பேசிய அவர், “நாம் ஆட்சிக்கு வந்த பிறகு திராவிட அடையாளங்கள் சிதைக்கப்படும், தூய தமிழர் அடையாளங்கள் நிறுவுப்படும். வரலாறு முழுவதும் இந்த நிலப்பரப்பைத் தமிழ்நாடு என்றுதான் குறிப்பிட்டு வருகின்றனர். திட்டமிட்டே தமிழர்கள் செய்த அனைத்தையும் மறைத்து அழித்துவிட்டு, இவர்கள் செய்ததுபோல் சூடிக் கொண்டார்கள் திராவிடர்கள். திராவிடம் என்பது தமிழர் அல்லாதோர் வசதியாக வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று.
`எல்லாம் பேசிவிட்டு, 2 சீட்டுகளுக்கு எங்களிடம் வருவார்’ என என்னை இதர அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சிக்கிறார்கள். ஒருநாள் நீங்கள் என்னிடம் பேரம் பேசி 2, 3 சீட்களுக்கு என் பின்னால் வந்து நிற்ப்பீர்கள்… தனித்து நிற்பதையும் விமர்சிக்கிறார்கள், தனித்து நிற்போம் தனித்துவத்தோடும் நிற்போம்” என்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com