எந்தக் காவல்துறை அதிகாரி, மக்களின் சாவுக்குக் காரணமானவர்களுள் ஒருவரென அருணா ஜெகதீசன் ஆணையம் குற்றம் சுமத்தியதோ அதே அதிகாரிக்கு திமுக அரசு பதவியுயர்வு வழங்குகிறதென்றால், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்துகிறதா திமுக அரசு? துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்திய 17 காவல்துறையினர் மீது மட்டுமல்லாது, சுட ஆணையிட்ட அரசு அதிகாரிகள், முந்தைய அதிமுக அரசின் ஆட்சியாளர்கள் வரை எல்லோர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதுதான் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களின் குரலாக இருக்கும்போது, அதற்கு முற்றிலும் நேர்மாறாக செயல்படும் திமுக அரசின் நிர்வாகச் செயல்பாடு அப்பட்டமான மக்கள் விரோதமாகும்.

காவல்துறையினரை ஏவிவிட்டு மக்களைக் கொன்றுகுவித்த அதிமுக அரசுக்கும், கொலையாளிகளென்று தெரிந்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கும் திமுக அரசுக்கும் என்ன வேறுபாடு? மாநில அரசின் கைகளிலே அதிகாரமிருந்தும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் இருந்தும், அதனை செய்வதற்குரிய ஆதரவு மக்களிடமிருந்தும் விடாப்பிடியாய் செய்ய மறுத்து கொலையாளிகளைக் காப்பாற்றுவது ஏன் முதல்வரே? அதிமுகவோடு நாளும் வார்த்தைப்போர் செய்து, லாவணிச்சண்டை போடும் திமுக, அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் நடந்த பெருங்குற்றத்திற்கு நீதியைப் பெற்றுத் தர மறுப்பது வெட்கக்கேடு இல்லையா? இதுதான் நீங்கள் பேசும் சமூக நீதியா முதல்வரே? இதுதான் நீங்கள் தருவதாகக் கூறிய விடியல் ஆட்சியா? திமுகவுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கூறுவோரைக்கூட வழக்குத்தொடுத்து கைதுசெய்து சிறைப்படுத்தும் திமுக அரசு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய கொலையாளிகள் மீது வழக்குத் தொடுக்க மறுத்து அவர்களைக் காப்பாற்றி வருவது ஏற்கவே முடியாதப் பேரவலமாகும்.
ஆகவே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் மக்களைத் துள்ளத் துடிக்கப் பச்சைப்படுகொலை செய்திட்ட காவல்துறையினர் மீதும், ஏவிவிட்ட அதிகார வர்க்கத்தினர் மீதும் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையின்படி, சட்ட நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். மாறாக, அதனை செய்ய மறுத்து, மக்களைப் படுகொலை செய்தவர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற துணைபோனால் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு எனும் அரசப் பயங்கரவாத நடவடிக்கையில், அதிமுகவோடு சேர்த்து திமுகவும் வரலாற்றுப்பழியை சுமக்க நேரிடுமென எச்சரிக்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
