“2021-இல் எம்.எல்.ஏ… 2024-ல் துணை முதலமைச்சர் என்றால் அதற்கு பெயர் வாரிசு அரசியல் தாண்டி என்னவாக இருக்க முடியும்?”
“உதயநிதி துணை முதலமைச்சராகினால், அதனை வாரிசு அரசியல் எனச் சொல்ல முடியாது. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி அவர் நின்றபோதும் எதிர்க்கட்சிகள் இதே விமர்சனத்தை முன்வைத்தார்கள். ஆனால் எதிர்த்து நின்ற எவருக்கும் டெப்பாசிட் கிடைக்காத வகையில் மக்கள் உதயநிதியை வெற்றிபெற செய்தனர். “தனக்கென்று தலைவர் இருக்கிறார்` என மக்கள் அவரை ஏற்றுக் கொண்டார்கள். மேலும் துணை முதலமைச்சர் பதவி என்பது முதலமைச்சரின் அதிகாரத்துக்குட்பட்டது. முதலமைச்சருக்கு துணையாக உதயநிதி இருந்து நாட்டை இன்னும் வேகமான முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது எங்களின் ஆசை.”
“துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் இருக்கும்போது துணை முதலமைச்சர் உதயநிதி என்றால்… (இடைமறிக்கிறார்)”
“அண்ணாவோடு, எம்.ஜி.ஆரோடு, கலைஞரோடும், தற்போதைய முதலமைச்சரோடும் இருக்கும் எங்கள் பொதுச் செயலாளர் துரைமுருகன் சொல்கிறார்… `இப்படிப்பட்ட அமைச்சரை நான் பார்த்ததில்லை, உதயநிதி எங்களை வழிநடத்த வேண்டும்` என்று. அவர் அரசியல் அனுபவத்துக்கு அது மிகப் பெரிய வார்த்தை. அதையே நாங்களும் முன்மொழிகிறோம்.”
“அயோத்தி ராமர் விழா, நாட்டைப் பிளவுபடுத்த முயற்சி என்கிறார் சீதாராம் யெச்சூரி.. தி.மு.க மென்மையாக அவ்விவகாரத்தை மென்மையாக அணுகுகிறதோ!”
“தொடர்ந்து அழுத்தம் திருத்தமாக சொல்லி வருகிறது தி.மு.க. மசூதியை இடித்து கோயில் கட்டுவதில் எங்களுக்கு உடன்பாடில்லை என்றுள்ளார் உதயநிதி. கட்சியின் பொருளாளர் டி.ஆர் பாலு `இது பா.ஜ.க-வின் அரசியல் நாடகம்` எனக் குறிப்பிட்டு காட்டமான அறிக்கையை கொடுத்திருக்கிறார். கடவுளை அரசியலுக்கான பயன்படுத்துவது அயோக்கியத்தனம். கடவுளை வைத்து வாக்கு அரசியல் செய்வது கேவலம்தான்”
“கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சுற்றி இவ்வளவு சர்ச்சைகளா?“
“கோயம்பேட்டில் பேருந்து நிலையம் அமைத்தபோதும் மக்களுக்கு சில சிரமங்கள் ஏற்பட்டது. இப்போது ஏற்படும் சில சில சிரமங்களை உடனடியாக கண்டறிந்து உரிய தீர்வு காண்கிறார் அமைச்சர் சேகர்பாபு. கிட்டதட்ட அனைத்து இடையூறுகளும் தீர்ந்துவிட்டன. விரைவிலேயே குழப்பங்கள் அனைத்தும் தீரும்”
“கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தை லூலு மாலுக்கு தரப்போவதாக சொல்கிறாரே சீமான்?”
“சீமான் கமிஷனுக்காக அப்படி பேசியிருப்பாரே தவிர, அதில் எந்த உண்மையுமில்லை”
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com