நாம் செய்த தியாகங்கள் கொஞ்சநஞ்சம் அல்ல. வரலாறு கூட பதிவு செய்ய பயப்படும் அளவுக்குத் தியாகங்களை நம் தமிழர் செய்திருக்கிறார்கள். ‘காலம் வரும்’ என்று காத்திருந்த தலைவனின் பிள்ளைகள் அல்ல நாங்கள். ‘எங்கள் காலத்தை நாங்களே உருவாக்குவோம்’ என்ற தலைவனின் பிள்ளைகள் நாங்கள்.
நாம் செய்ய வேண்டியது எல்லாம் தமிழ் தேசிய இனத்திற்கான அரசியலை வென்று அதிகாரத்தைக் கைப்பற்றி தமிழர் தேச விடுதலைக்கான அரசியலை செய்ய வேண்டும். அதை கவனத்தில் கொண்டு, நீங்கள் எல்லோரும் களப்பணியாற்ற வேண்டும். நம்முடைய மாவீரர்கள் என்ன காரணத்திற்காக தன் இன்னுயிரை ஈந்தார்களோ அது நிறைவேற்றப்படும் வரை களத்தில் நிற்போம்.
“நம்முடைய மாவீரர்கள் சிந்திய குருதி! ஈழம் மீட்பது உறுதி! நம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்” என்று பேசினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com