அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, செந்தில் பாலாஜி அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பென்-டிரைவில் சேகரிக்கப்பட்ட தகவலின்படி, வேலை பெற்று தருவதாக கூறி 67 கோடியே 75 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், செந்தில் பாலாஜி, ஆரோக்கியமாக இருப்பதாகவும், மருத்துவ சிகிச்சை காரணங்களுக்காக ஜாமீன் வழங்க முடியாது என ஏற்கனவே முதன்மை அமர்வு நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ள நிலையில், ஸ்டான்லி மருத்துவர்களின் அறிக்கைகளும் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனை சிகிச்சை அவசியம் என குறிப்பிடவில்லை எனவும் வாதிடப்பட்டது.
மேலும், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையில், ஜாமீன் வழங்கினால் காட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்த நிலையில், இன்று தீர்ப்பளித்தார்.
நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த தீர்ப்பில், மருத்துவ காரணங்களை கூறி ஜாமீன் கேட்க முடியாது என்றும், அவரது சகோதரர் அசோக்குமார் தலைமறைவாகியுள்ளதை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்றும், சோதனைக்கு சென்று அதிகாரிகள் தாக்கப்பட்டது தொடர்பான கடந்த சம்பவங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறி, செந்தில்பாலாஜியின் ஜாமீன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
நன்றி
Publisher: www.vikatan.com