20 வருடங்களாக பேயுடன் உடலுறவு வைத்திருந்ததாக பெண் ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியுள்ளது வைரலாகி வருகிறது.
கொலம்பியாவைச் சேர்ந்த அல்விரா என்ற பெண், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், தனது காதலைப் பகிர்ந்து கொண்டார், அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான ஜுவான் டியாகோ அல்விராவிடம் உங்களின் காதல் வாழ்க்கையை விவரிக்குமாறு கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த அல்விரா, “ஒரு நாள், நான் படுத்திருந்தபோது, என் காலில் இருந்து என் மார்புக்கு ஒரு கை நகர்வதை உணர்ந்தேன், அது விசித்திரமாக இருந்தது, எனக்கு பயமாக இருந்தது. அந்த நிமிடத்திலிருந்து, அவர் என்னுடன் உடலுறவு கொள்ள ஒரு ஆவி போல என்னிடம் வரத் தொடங்கினார்.
முதலில் பயமாக இருந்தது, பின்னர் பழகிவிட்டது, ஒவ்வொரு இரவும் அவரின் வருகையை ரசித்தேன். இது தொடர்ந்து 20 ஆண்டுகளாக எனது வாழ்க்கையில் நடைப்பெற்றுவந்தது. ஒரு கட்டத்தில் நான் அவரது முகத்தைப் பார்க்க வேண்டும் என கேட்டேன். அவரது முகத்தைப் பார்த்ததும் எங்களது உறவை முறித்துக்கொண்டேன். அவருக்கு கூர்மையான பல், விகாரமான முகம் இருப்பதைக் கண்டு அவரை வெறுத்தேன் என்று பெண் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பெண்ணின் பேச்சு இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், உளவியலாளர்கள் அவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.
நன்றி
Publisher: 1newsnation.com