அதில் விசாரணை ஜனவரி மாதத்தையும் தாண்டி நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சபாநாயகர் சார்பாக எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பு மனு மீது விசாரணை நடைபெறும் கால அட்டவணை விபரம் தாக்கல் செய்யப்பட்டது. அதனை பார்த்த நீதிபதிகள் கடும் அதிருப்தியடைந்தனர். `சபாநாயகர் என்ன மாதிரியாக கால அட்டவணை கொடுத்திருக்கிறார். கடந்த முறை நல்லது நடக்கும் என்று கருதித்தான் கால அட்டவணை கேட்டோம். அதற்காக காலவரையற்ற அட்டவணையை நிர்ணயிக்கக்கூடாது.


ஜூன் மாதத்தில் இருந்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஜூலை 14ம் தேதி நோட்டீஸ் அனுப்பி செப்டம்பரில் உத்தரவும் பிறப்பித்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இரண்டு மாதத்திற்குள் இவ்விவகாரத்தில் சபாநாயகர் முடிவு எடுக்கவேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். முன்னதாக உத்தவ் தாக்கரே சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபில், `பதவி பறிப்பு மனு மீது குறுக்கு விசாரணை, சாட்சிகளிடம் வாக்குமூலம் என ஒரு ஆண்டுக்கு விசாரணை நடைபெறும் வகையில் சபாநாயகர் கால அட்டவணை கொடுத்திருக்கிறார். இது சிவில் வழக்கு இல்லை” என்று தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com