அங்கிருந்து உறவினர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளனர். அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு வருவதற்காகத்தான் இந்த மாணவிகள் உறவினர் வீட்டுக்குச் சென்றனர். வரும் வழியில், மழைநீர் தேங்கியிருப்பதை பார்த்த மாணவிகளுக்கு அது பெரிய பள்ளம் என்று தெரியவில்லை. கால் நனைத்து, விளையாடுவதற்காக இறங்கியிருக்கிறார்கள். அதில், 2 மாணவிகளும் மூழ்கி இறந்துவிட்டனர். அலட்சியமாக விடப்பட்ட இந்தப் பள்ளத்தால், மேலும் விபரீதங்கள் ஏற்படாமலிருக்க உடனடியாக அதனை மூட வேண்டும்’’ என்றனர் கொந்தளிப்புடன்.
இந்த நிலையில், பள்ளத்தை மூடாமல் அப்படியே விட்டுச்சென்ற ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, உயிரிழந்த மாணவிகளின் உறவினர்கள் இன்றைய தினம் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்த பிறகே கலைந்துசென்றனர். இந்தச் சம்பவம், குறித்து அம்பலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். பள்ளத்தை மூடுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், ‘‘பள்ளத்தை உடனடியாக மூடியிருந்தால், இந்தச் சம்பவமே நடந்திருக்காது. இதில், அனைவருடைய பொறுப்புமே இருக்கிறது. இப்படியான துயரச் சம்பவம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து, பள்ளி நிர்வாகமோ, பஞ்சாயத்து நிர்வாகமோ, ஏன் தனிப்பட்ட மனிதர்களோ கூட பள்ளத்தை மூடியிருக்கலாம்’’ என்ற கருத்தை, வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com