இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, தொடர்ந்து எங்கள் ஆட்சியிலிருந்ததுபோல், ஆவின் பாலையே நம்பியுள்ள தமிழ்நாட்டு மக்களுக்கு நீலம், பச்சை மற்றும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளை தட்டுப்பாடின்றி வழங்க வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், நமது விகடன் வலைதளபக்கத்தில்,”4.5% கொழுப்பு உள்ள பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டை நிறுத்திவிட்டு, 3.5% கொழுப்பு கொண்ட ஊதா நிற பாக்கெட்டை முன்னிலைப்படுத்த முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
பச்சை நிற பாக்கெட் விற்பனை தொடர வேண்டுமா?” எனக் கேள்வி எழுப்பி கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் “ஆம்’ – ‘இல்லை’ – ‘கருத்து இல்லை’ என்ற மூன்று விருப்பத்தேர்வுகளையும் வழங்கப்பட்டது.
இந்தக் கருத்துக் கணிப்பில் கலந்துகொண்ட வாசகர்களில், ‘பச்சை நிற பாக்கெட் விற்பனை தொடர வேண்டுமா? என்ற கேள்விக்கு ‘ஆம் என 70 சதவிகித வாசகர்களும், இல்லை என 23 சதவிகித வாசகர்களும், கருத்து இல்லை என 7 சதவிகித வாசகர்களும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
நன்றி
Publisher: www.vikatan.com