பொதுவாக சாதாரண சளி, இருமல், காய்ச்சல், தலைவலி போன்ற உடலில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுகாமல் அருகில் இருக்கும் மருந்து கடைகளில் மருந்து வாங்கி சாப்பிடும் பழக்கம் இன்றளவிலும் நம்மில் பலருக்கும் உள்ளது. ஆனால், மருத்துவரின் ஆலோசனை இன்றி எந்தவொரு மருந்தையும் சாப்பிட கூடாது என்பதும் நாம் அறிந்த ஒன்றே. இதுபோன்ற மருத்துவரின் ஆலோசனை இன்றி உட்கொள்ளும் பல்வேறு வகையான மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதால இந்திய மருந்தியல் ஆணையம் குறிப்பிட்ட சில மருந்து, மாத்திரைகளை மருந்து கடைகளில் விற்க தடை செய்தது.
இந்நிலையில், தற்பொழுது வரை பல்வேறு மருந்து கடைகளில் தடை செய்யப்பட்ட மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்துதான் வருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைள் எடுத்து வந்தாலும் பொதுமக்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்து கடைகளில் எந்தவொரு மருந்தும் வாங்கி உட்கொள்ள கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
ALSO READ : ரேஷன் அட்டை தாரர்களே… உங்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..!
அந்த வகையில், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி, முடக்குவாதம், வீக்கம், பல்வலி ஆகிய வலிகளுக்கு MEFTAL என்று சொல்லப்படும் மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டு வந்தது. பெரும்பாலான மருத்துவர்களும் MEFTAL மாத்திரைகளை நோயாளிகளுக்கு வழங்கி வந்தனர். இந்த மாத்திரைகள் குறித்து தற்பொழுது இந்திய மருந்தியல் ஆணையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, MEFTAL மாத்திரைகளை பொதுமக்கள் எடுத்து கொள்ளும் பட்சத்தில் 2 முதல் 8 வாரத்திற்கு பின் தோல் அரிப்பு, காய்ச்சல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்த மாத்திரைகளை உட்கொண்டு ஓரிரு வாரத்திற்கு பிறகே பக்கவிளைவு ஏற்படுவதால் பொதுமக்களுக்கு இதனால்தான் பக்கவிளைவு ஏற்பட்டு உள்ளது என்பது தெரியாமல் போய்விடுகிறது இதனால், பொதுமக்கள் எச்சரிகையாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in