“ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த பாலம் இப்படி தான் இருக்கிறது. சாலையோர விளக்குகள் குறைவாக உள்ளதால் இரவு நேரங்களில் இது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் மழைக் காலங்களில் சாலையில் உள்ள குப்பைகள் மற்றும் சேற்றினால் சாலை வழுவழுப்பாக ஆவதால் ஆபத்து அதிகரிக்கிறது. பல்வேறு குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியாக இருக்கும் இந்த இடத்தில் ஓடும் கால்வாயின் மேல் உள்ள பாலம் இந்த நிலையில் இருப்பது அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. இதை விரைவில் சரி செய்ய வேண்டும்”, என்று கூறினார் இப்பகுதியில் வசிக்கும் மஞ்சு பார்கவி இளங்கோ என்பவர்.
பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், முதியவர்கள் எனப் பலரால் பயன்படுத்தப்படும் பாலம் இது. மேலும் இது மிகவும் குறுகலான பாதை ஆகும். அதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.
இந்த பாலத்தின் தடுப்புச் சுவரைச் சீரமைப்பதின் மூலம் தேவையற்ற விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க இயலும். விபரீதம் நடக்கும் முன் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புவோம்!
நன்றி
Publisher: www.vikatan.com