“கடந்த நவம்பரில் நான் கைது செய்யப்பட்ட பிறகு வேலையில் இருந்து நீக்கப்பட்டேன். அதன்பின், எனது குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள நான் மிகவும் போராடி வருகிறேன்” என போராட்டத்தில் ஈடுபட்டதால் வேலையிலிருந்து நீக்கப்பட்டது குறித்து வெங்கடேசன் மனம் வருந்தியுள்ளார்.
இது குறித்துப் பேசியுள்ள சோழன், “என் குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் நான்தான். என் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதால், வேலையில் அமர்த்த முடியாது என்று சொல்லிவிட்டது நிறுவனம். பணியைத் தொடர வேண்டுமென்றால் போலீஸிடம் இருந்து நோ அப்ஜக்ஷன் சான்றிதழைப் பெற்று வருமாறு கூறியது. அவ்வாறு செய்யத் தவறினால் நான் பணிநீக்கம் செய்யப்படுவேன் என்றது.
ஆனால், நான் ராஜினாமா செய்ய வேண்டும் என நிறுவனம் வலியுறுத்தியது. அதனால், ராஜினாமா செய்தேன். நான் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டதும் என்னைத் திரும்ப பணியில் சேர்ப்பதாக நிர்வாகம் உறுதியளித்துள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
விவசாய நிலத்தை காக்க ஒரு புறம் மக்கள் போராடி வரும் நிலையில் தங்களது வேலைகளையும் இழக்கிறார்கள். இதனால் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் நிச்சயமற்ற எதிர்காலத்தைக் காட்டுகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையின் நடவடிக்கைக்கு உள்ளான ஆர்வலர் அருள் ஆறுமுகம் கூறுகையில், “இந்த நடவடிக்கை அமைதியான போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் நோக்கித்தில் எடுக்கப்பட்டது.
தொழிற்சாலையில் பணிபுரியும் பல கிராம மக்கள் தங்கள் நிலத்தை இந்தத் திட்டத்தால் இழக்க நேரிடும். ஆனால், வேலை பறிபோய்விடுமோ என்ற பயம் அவர்களைப் போராடுவதிலிருந்து தடுக்கும்.
அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதால் அவர்கள் குற்றவாளிகள் என்று அர்த்தம் அல்ல. வழக்கு விசாரணை நடந்து வருகிறது. பேசுவதற்கு எதிராக அவர்களை அச்சுறுத்துவதற்காக இந்த பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”‘ என்று தெரிவித்துள்ளார்.
நன்றி
Publisher: www.vikatan.com