பிரபல இணையதள ஊடகமான நியூஸ் கிளிக் நிறுவனம், சட்டவிரோதமாக வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவதாக எழுந்த புகாரில், 2021-ல் அமலாக்கத்துறை ஏற்கெனவே சோதனை நடத்தியிருந்த நிலையில், டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவு இன்று அதிகாலை, நியூஸ் கிளிக் ஊடகவியலாளர்களின் வீட்டில் சோதனையில் ஈடுபட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


குறிப்பாக, நியூஸ் கிளிக் நிறுவனத்தின் ஆசிரியர் பிரபீர் புர்கயஸ்தா உட்பட சில பத்திரிகையாளர்கள், டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நியூஸ் கிளிக் நிறுவனத்துக்குத் தொடர்புடைய இடங்கள் மற்றும் அதன் ஊடகவியலாளர்களின் வீடுகள் என மொத்தமாக 30 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றிருக்கிறது. இதில், இந்திய மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் வீட்டிலும், அதிகாரிகள் சோதனை நடத்தியது தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com