ஆனால், அந்த திட்டமும் தற்போது தோய்வைத் சந்தித்திருக்கிறது. இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி பகுதியைச் சேர்ந்த ஆறு திறமையான ‘எலி துளை’ சுரங்கத் தொழிலாளர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மூலம், தொழிலாளர்களை மீட்கவிருக்கும் மீதமுள்ள 10 – 12 மீட்டர் இடிபாடுகளைக் கைமுறையாகத் துளையிடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே இரண்டு மணி நேரத்திற்குள் கிட்டத்தட்ட ஒரு மீட்டர் இடிபாடுகளை வெற்றிகரமாகத் தோண்டியிருக்கிறார்கள் என்பது தற்போதைய மகிழ்ச்சி செய்தி. குறுகிய சுரங்கப் பாதைகளில் நிலக்கரியைப் பிரித்தெடுக்கும் பணியில் பொதுவாக ‘எலி துளை’ சுரங்கத் தொழிலாளர்கள் பணியாற்றுவார்கள்.
இதனிடையே உத்தரகாண்ட் முதல்வர், இன்று நல்ல செய்து வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com