அந்த வீடியோவில்அவர் பேசியது, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள மதுராபூரில் நடந்த பேரணியில் மக்களிடம் உரையாற்றியது. இது பரபரப்பை ஏற்படுத்தவே, சுகந்தா மஜும்தாரின் இந்தப் பேச்சு, மம்தா மீது வன்முறையைத் தூண்டும் விதமாகவும், பெண்ணுக்கு எதிரான வெறுப்புப் பேச்சாகவும் இருக்கிறது எனக் கண்டனம் தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ், அவரை மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தியிருக்கிறது.
மேலும், திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் எம்.பி மஹுவா மொய்த்ரா, “மேற்கு வங்க பா.ஜ.க தலைவரும், எம்.பி-யுமான சுகந்தா மஜும்தார், முதல்வருக்கு எதிராக உடல் ரீதியான வன்முறைக்கு அழைப்பு விடுக்கும் வகையில் பகிரங்கமாக ஒரு உரையை நிகழ்த்தியிருக்கிறார். இது மிகவும் வெட்கக்கேடான செயல் மட்டுமின்றி, பா.ஜ.க-வின் அழிவையும் இது காட்டுகிறது. எனவே பா.ஜ.கவின் இந்த ஆணாதிக்க தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
ஆனால், திரிணாமுல் காங்கிரஸின் இத்தகைய கண்டனத்துக்கு, பா.ஜ.க இதுவரை மறுப்பு தெரிவித்தோ, எதிர்ப்பு தெரிவித்தோ எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com