ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு சிறப்பு முகாமானது நாளை (16.09.2023) சனிக்கிழமை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, மாவட்ட நிர்வாகம், தொழில் நெறி வழிகாட்டு மையம், ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டில் விழாவினை முன்னிட்டு தனியார் வேலைவாய்ப்பு முகாமானது ராமநாதபுரத்தில் உள்ள ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.
இந்த முகாமில், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இருந்து முதுகலை, இளங்கலை, பொறியாளர் பட்டதாரிகள் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப பணி வாய்ப்புகளை பெறலாம். மேலும், இதில் 100-க்கும் மேற்பட்ட முண்ணனி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் சுயவிவரக்குறிப்பு, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ், தங்களது புகைப்படத்துடன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
நன்றி
Publisher: tamil.news18.com