திருக்கோயிலின் முன்மண்டபத்தில் மகாலட்சுமி, கையில் வெண்ணெய் உடன் நவநீத கிருஷ்ணா், திருமங்கையாழ்வாா், நம்மாழ்வாா், ராமானுஜா் ஆகியோாின் சிலைகள் உள்ளன. இந்த மண்டபத்தில் மேல் சுவரில் உள்ள ராசி சக்கரத்தின் மத்தியில் மகாலட்சுமி வீற்றிருக்கிறாள். இந்தப் பகுதியில் நின்று மூலவரை தரிசித்தால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது பக்தா்களின் நம்பிக்கையாக உள்ளது. கருடாழ்வார், ஆஞ்சநேயருக்கும் தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலின் தலவிருட்சமாக புளியமரம் உள்ளது. பெருமாளின் பத்து அவதாரங்களும் தனித்தனி சிலைகளாக கோயிலை சுற்றியுள்ள தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
நன்றி
Publisher: tamil.hindustantimes.com