முன்னதாக, `இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்களும் மற்றவர்களும்தான் காரணம்’ என்று ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) என்ற உரிமைக் குழு, மொத்தமாக 13 பேருக்கு எதிராக அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இத்தகைய சூழலில் TISL-ன் மனுவை இன்று விசாரித்த இலங்கை உச்ச நீதிமன்றம், “கோத்தபய ராஜபக்சே, மஹிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோரின் செயல்பாடுகளே பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்தன” என்று தீர்ப்பளித்திருக்கிறது. மேலும், இந்தத் தீர்ப்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், முன்னாள் கருவூலச் செயலாளர் பி.பி.ஜயசுந்தர உட்பட பிற அதிகாரிகளின் பெயர்களையும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.


இது குறித்துப் பேசிய TISL-ன் நிர்வாக இயக்குநர் நடிஷானி பெரேரா, “இந்தத் தீர்ப்பானது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பொது அதிகாரிகள், மக்களின் வாழ்க்கையில் தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்தும் முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது, மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது!” என்று தெரிவித்தார்.
TISL தாக்கல் செய்த மனுவில், அதிபர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Publisher: www.vikatan.com