வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமா இன்னைக்கி தமிழகத்தில 13 மாவட்டத்தில செம்மயா கனமழை பெய்ய வாய்ப்பு இருக்குதாம். வானிலை ஆய்வுமையம் அறிவிச்சிருக்காங்க.
இலங்கை, அத ஒட்டி இருக்குற குமரிக்கடல் பகுதியில வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுது. இதனால கன்னியாகுமரி, திண்டுக்கல், திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, ராமநாதபுரம் இந்த மாவட்டத்தில இன்னைக்கு (திங்கட்கிழமை) கனத்த மழை பெய்ய வாய்ப்பு இருக்குதுனு ஆய்வுமையம் தெரிவிச்சிருக்கு.
Also Read >> மின்சார ரயில் சேவை ரத்து! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!
அதுமட்டுமில்ல, தமிழகத்துல இருக்குற 22 மாவட்டங்களில காலையில 7 மணி வரைக்கும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கு. கடலூர் மாவட்டங்களிலும், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை காலையில 7 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்குதுனு வானிலை மையம் தெரிவிச்சிருக்கு.
நன்றி
Publisher: jobstamil.in