டாஸ்மாக் கடை முன்பு நின்று குடிக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்..!! விஜய் படம் என்றாலே பிரச்சனை தான்..!! லோகேஷ் பரபரப்பு பேட்டி..!!

டாஸ்மாக் கடை முன்பு நின்று குடிக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்..!! விஜய் படம் என்றாலே பிரச்சனை தான்..!! லோகேஷ் பரபரப்பு பேட்டி..!!

லியோ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”விஜய் படம் என்றாலே ஏதாவதொரு பிரச்சனை வந்துகொண்டே தான் இருக்கும். ட்ரெய்லரில் இடம் பெற்றிருந்த கெட்ட வார்த்தை பிரச்சனையானது. பின் அதை மாற்றினோம். கதாபாத்திரத்திற்கு அது பொருத்தமாக இருந்தது. அதனால்தான் அந்த வார்த்தையை வைத்தோம். அந்த வார்த்தை பேசியது விஜய் கிடையாது. அந்த கதாபாத்திரம் தான். கட்டாயம் அந்த வார்த்தை திரையில் வராது.

வன்முறை அதிகமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால், என்னைப் பொருத்தவரை அது ஆக்‌ஷன் திரில்லர்தான். படத்தில் அதிகளவில் போதை மற்றும் அக்‌ஷன் காட்சிகளை காட்டுவது போதைப்பழக்கத்தை நிறுத்துவதற்கே தவிர, ஊக்கப்படுத்த அல்ல. விஜய் போன்ற பெரிய நடிகர்கள் சொல்லும்போது பெரியளவில் மக்களிடம் சென்று சேரும்.

‘மாஸ்டர்’ படத்தின் முதல் பாதியில் விஜய்யை குடிகாரனாகக் காட்டியிருப்போம். பின்னர், அவரே இரண்டாம் பாதி முழுக்க குடிப்பழக்கத்திற்கு எதிராக பேசியிருப்பார். 18+ வயதிற்குக் கீழ் இருப்பவர்கள் குறிப்பிட்ட படத்தைப் பார்க்க வேண்டாம் என்று சொல்ல திரையரங்கு முன் நிற்கிறார்கள். ஆனால், எந்தவொரு மதுபானக் கடையிலும் குடிக்க வேண்டாம் என்று சொல்வதற்கு யாரும் நிக்கவில்லை என்பதே ‘மாஸ்டர்’ படத்தில் சொல்லியிருந்தோம்.

படத்தில் ஓரளவிற்குத் தான் கருத்து சொல்ல முடியும். படம் முழுக்க பாடமாக எடுத்தால் நன்றாக இருக்காது. என்னை நம்பிய தயாரிப்பாளருக்கும் போட்டப் பணத்தை திருப்பி எடுத்துத் தர வேண்டும். பெரிய ஹீரோக்களுடன் படம் பண்ணுவதால் எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. முழு சுதந்திரம் எனக்கு இருக்கிறது. நான் ரஜினியுடன் எடுக்கப் போகும் அடுத்தப்படம் முற்றிலும் வேறு ஜானரில் இருக்கும். ‘இரும்புக் கை மாயாவி’யும் அப்படித்தான்.

படம் எடுப்பதுதான் என் கையில் இருக்கிறது. திரையரங்கு விநியோகம், டிக்கெட் பிரச்சனை எல்லாம் என் கையில் இல்லை. படம் எடுப்பதை விட அது ரிலீஸ் ஆகும் போது தான் அதிக ப்ரஸர் இருக்கும். எங்களுக்கே குறிப்பிட்ட டிக்கெட்கள் தேவைப்பட்டது. ஆனால், எங்களுக்கேக் கிடைக்கவில்லை. இது என் கையில்லை. இப்படம் ‘LCU’ உதயநிதி சார் ட்வீட் போட்டு பக்கத்தில் ஒரு கண்ணடிக்கும் எமோஜியும் போட்டிருந்தார். அது சஸ்பென்ஸ், படத்தை பார்த்தால் உங்களுக்கேத் தெரியும்” என்று கூறினார்

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *