Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
பொதுவாக மிளகில் பல்வேறு நன்மைகள் இருப்பதால், மிளகாய் சமையலில் பயன்படுத்துகிறார்கள், இந்த மிளகு மூலமாக பல நோய்கள் வீட்டிலேயே குணப்படுத்தப்படுகின்றனர். அந்த விதத்தில், நாள்தோறும் காலை எழுந்தவுடன், வெதுவெதுப்பான வெந்நீரில் மிளகை பொடி ஆக்கி கலந்து பருகினால், நம்முடைய உடலுக்கு மிகுந்த பலன் கிடைக்கும். அதோடு, ஆண்கள் கருப்பு மிளகு சாப்பிடுவது மிகவும் முக்கியம் என்று சொல்லப்படுகிறது.
அதாவது, வயிற்றில் வாயு அல்லது அமிலத்தன்மை காணப்பட்டால், எலுமிச்சை சாறுடன், ஒரு சிட்டிகை அளவு கருப்பு உப்பு மற்றும் கருப்பு மிளகை சேர்த்து குடித்தால், ஒரு நொடி பொழுதில் வலி குறைந்து விடும்.
வெதுவெதுப்பான வெந்நீரில், கருப்பு மிளகு சேர்த்து சாப்பிட்டால், உடல் வலிமை பெறும். அதோடு, உடலில் நீர் சத்து அதிகரிக்கும், கருப்பு மிளகில் கேப்சைசின் என்ற கலவை இருக்கிறது. இதன் மூலமாக, இரத்த நாளங்கள் விரிவடைகிறது. இதன் காரணமாக, இரத்தம் வேகமாக பாய்கிறது. திருமணமான ஆண்கள் நிச்சயமாக இந்த பானத்தை பருக வேண்டும்.
இந்த கருப்பு மிளகில் பைபரின் இருக்கிறது. அதோடு, இது மன அழுத்த எதிர்ப்பு சக்திகளை கொண்டிருக்கிறது. இதனால், கருப்பு மிளகு பொதுமக்களின் பதற்றம் மற்றும் மனச்சோர்வை நீக்க உதவியாக இருக்கிறது.
இந்த கருப்பு மிளகு ஈறு வலிக்கு மிக விரைவாக நிவாரணம் வழங்குகிறது. கருப்பு மிளகு, ஜாதிக்காய், கல் உப்பு போன்றவற்றை சமமான அளவில் கலந்து, பொடி செய்து, சில துளிகள் கடுகு எண்ணெயை கலந்து, பற்கள் மற்றும் ஈறுகளில் தடவி, அரை மணி நேரம் சென்ற பிறகு, வாயை கழுவ வேண்டும். இதன் மூலமாக உங்களுடைய பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் வலி நீங்கும்.
இந்த கருப்பு மிளகை தொடர்ந்து, சாப்பிட்டு வருவது, பெண்களுக்கு மிகவும் நன்மை தரும். இந்த கருப்பு மிளகில் வைட்டமின் சி, விட்டமின் ஏ, பிளவனாய்டுகள், கரோட்டின்கள் மற்றும் மற்ற ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் இருக்கின்றன. இது பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் ஆபத்தை வெகுவாக குறைகிறது.
இதைத் தவிர்த்து, சளி பிடித்தால், சூடு செய்த பாலில் கருப்பட்டி கலந்து குடித்தால், நிவாரணம் கிடைக்கும். இதைத் தவிர மீண்டும், மீண்டும் சளி வரும் தொடர்ந்து, தும்மல் வந்தால், மிளகின் எண்ணிக்கையை நாளுக்கு நாள் அதிகரிக்க வேண்டும். அதாவது, பாலில் கருப்பட்டி கலந்து, முதலில் ஒரு மிளகில் இருந்து குடிக்க ஆரம்பிக்க வேண்டும். நாள்தோறும் ஒவ்வொரு எண்ணிகையில் மிளகை அதிகப்படுத்தி, 15 மிளகு வரும் வரையில் குடிக்க வேண்டும். அதன் பிறகு, 15 மிளகு வந்தவுடன், அடுத்தடுத்த நாட்களில், ஒவ்வொன்றாக குறைத்து, ஒரு மிளகுக்கு கொண்டு வர வேண்டும். இப்படி குடித்தால், சளி பிரச்சனையில் வெகு கால பலன்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
The post ஆண்களின் உடல் வலிமை பெற இதில் கூட சக்தி உள்ளதா….? மிளகில் மறைந்திருக்கும் பல்வேறு நன்மைகள்…..! appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com