பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் `மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று நடைபெற்ற 104-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, “சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற FISU உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 11 தங்கம் உட்பட 26 பதக்கங்களை வென்றிருக்கிறது, இது 1959 முதல் இந்தியா வென்ற மொத்த பதக்கங்களின் எண்ணிக்கையைவிட அதிகம். விளையாட்டு உலகில் இந்தியா நன்றாக முன்னேற வேண்டும், அதனால்தான் நான் அதை அதிகம் ஊக்குவிக்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து ஒருவர், `உங்களுக்குப் பிடித்த விளையாட்டு எது?’ எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, “ஹாக்கி, கால்பந்து, கபடி, கோ-கோ ஆகியவை. இவை நம் மண்ணோடு தொடர்புடையவை. இந்த விளையாட்டுகளில் நாம் ஒருபோதும் பின் தங்கிவிடக் கூடாது. இந்தியர்கள் வில்வித்தை மற்றும் துப்பாக்கிச் சுடுதல் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்படுவதை நான் பார்க்கிறேன். மேலும், இளைஞர்கள், குடும்பங்களுக்கு மத்தியில்கூட, விளையாட்டு மீதான அணுகுமுறை மாறிவிட்டது என்பதை காண்கிறேன்.
முன்பு ஒரு குழந்தை விளையாடச் செல்லும் போது, அதை குடும்பத்தினர் தடுத்து நிறுத்தினர். இப்போது நிறைய மாறிவிட்டது, நீங்கள் அடையும் வெற்றி ஒவ்வொரு குடும்பத்தையும் ஊக்குவிக்கிறது. ஒவ்வொரு விளையாட்டிலும், நம் குழந்தைகள் பங்கேற்கும் இடங்களிலெல்லாம், அவர்கள் நாட்டிற்கு பெருமை சேர்க்கிறார்கள். இன்று அவை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விவாதிக்கப்படுகின்றன. மேலும் சந்திரயான் -3 பெண்களின் சக்திக்கு ஓர் உதாரணம். பல பெண் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் பணியில் நேரடியாக ஈடுபட்டிருக்கிறார்கள்.
இந்த முழு பணியிலும் நேரடியாக ஈடுபட்டுள்ளனர், அவர்கள் திட்ட இயக்குநர் மற்றும் திட்ட மேலாளர் போன்ற பல முக்கிய பொறுப்புகளை கையாண்டிருக்கிறார்கள். எல்லையற்றதாகக் கருதப்படும் விண்வெளிக்கும் இந்தியாவின் மகள்கள் இப்போது சவால் விடுகிறார்கள். ஒரு நாட்டின் மகள்கள் இவ்வளவு லட்சியமாக மாறினால், அந்த நாடு வளர்ச்சியடைவதை யாரால் தடுக்க முடியும்… இந்தியாவின் கனவுகள் பெரியவை. அவற்றை நோக்கியே நமது முயற்சிகள் இருப்பதால், நாம் மிகவும் உயர்ந்திருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY
நன்றி
Publisher: www.vikatan.com