20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த குழுக்கள் அவர்களின் நடவடிக்கையால் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றனர். பிணைக் கைதிகளாகவும் பிடிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களின் தொடர் தாக்குதல் நடவடிக்கையால் வணிகக் கப்பல்கள் குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, இந்த ஆபத்துகளை கட்டுப்படுத்தும் விதத்தில், ஏமன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், வரலாற்றில் முதல் முறையாகக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
ஒருபுறம், 2022 – பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யா – உக்ரைன் போர், முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மற்றொருபுறம், இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரும் இன்றளவும் நீண்டு கொண்டிருக்கிறது. இந்தப் போர்களால் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில், ஏமன் நாடு இஸ்ரேலுக்கு எதிராக, பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டில் நடவடிக்கை எடுத்தது குறிப்பிடதக்கது. இந்த நிலையில், ஏமன் மீது அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகள் சிலவும் தாக்குதல் நடத்தியிருப்பது மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழல் பரவும் நிலை உருவாக்கியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com