மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்பைவிட சர்க்கரை ஏற்படுத்தும் பாதிப்பே கல்லீரை மோசமாக பாதிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
நம் உடல் உறுப்புகளில் மூளைக்கு அடுத்த பெரிய மற்றும் மிகவும் சிக்கலான உறுப்பு கல்லீரல் தான். நாம் வாய் வழியாக எடுத்து கொள்ளும் உணவுகள், மருந்துகள், பானங்கள் என அனைத்துமே கல்லீரல் வழியாகவே செல்கிறது. இதனால், கல்லீரல் தொடர்பான பாதிப்புகள் குறித்து நாம் அறிந்துவைத்துக்கொள்வது மிகவும் அவசியமாக உள்ளது. பொதுவாக, கல்லீரல் பாதிப்பு என்றாலே மது அருந்துவதால்தான் வருகிறது என்று கூறப்படுகிறது. இருப்பினும், கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளில் மதுவை விட சர்க்கரை சேர்த்துகொள்வதால் வரும் பாதிப்புகள் அதிகம் என்று தெரியவந்துள்ளது.
Nonalcoholic fatty liver நோய் (NAFLD) என்பது கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேரும் ஒரு நிலை ஆகும். மது குடிக்காமல் இருந்தாலும் கூட நீரிழிவு, உடல் பருமன் போன்ற சில காரணங்களால் கல்லீரலில் கொழுப்பு சேர்ந்து, NAFLD ஏற்படுகிறது. இடுப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் தொடர்ந்து அதிகரிக்க அதிகரிக்க ஒருவரது கல்லீரலில் சேரும் கொழுப்பின் அளவும் அதிகரிக்கிறது; இதற்கு சர்க்கரை முக்கிய காரணமாக இருக்கிறது. இது தொடர்பான ஆய்வு ஒன்றில் 3 வாரங்களில் சர்க்கரை அடங்கிய உணவுகள் மூலம் சுமார் 1,000 கூடுதல் கலோரிகளை எடுத்து கொண்ட நபர்கள் கண்காணிக்கப்பட்டனர். இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் 2 சதவீதம் மட்டுமே body fat-ஐ பெற்றிருந்தாலும், அவர்களின் கல்லீரல் கொழுப்பு 27 சதவீதம் அதிகரித்து காணப்பட்டது.
இந்த ஆய்வு முடிவு நாம் உண்ணும் உணவுகள் உண்மையில் நம் கல்லீரலை எந்த அளவிற்கு பாதிக்கிறது, அதில் எவ்வாறு விரைந்து சேதத்தை ஏற்படுத்துகிறது என்பதை காட்டுகிறது. நாம் உண்ணும் உணவுகள் மூலம் கல்லீரலில் படியும் கொழுப்புகள் காலப்போக்கில் fibrosis சிக்கலுக்கு வழிவகுக்கிறது. இறுதியில் இது cirrhosis-ஆக (கல்லீரலில் வடுக்கள் ஏற்படும் நிலை) மாறுகிறது. மேலும் Fatty Liver பாதிப்பு டைப்-2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே நம்முடைய கல்லீரலை முடிந்தவரை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.
சர்க்கரை உணவுகள் மற்றும் உடலின் சர்க்கரை அளவுகள் கல்லீரலை மட்டும் பாதிக்காது. ஏனென்றால் சர்க்கரை பல பாதிப்புகளுடன் தொடர்புடையது. டைப்-2 நீரிழிவு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உடல் எடை அதிகரிப்பு இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரிக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க செய்யும் சர்க்கரை மற்றும் இது சேர்க்கப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவது சர்க்கரைக்கு அடிமையாக்கும். எனவே சர்க்கரை மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிடும் அளவைக் கட்டுப்படுத்துவது ஒட்டுமொத்த நல்ல ஆரோக்கியத்திற்கு மிக அவசியம்.
நன்றி
Publisher: 1newsnation.com