
நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து “பொதுவிநியோகம்” என்னும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இலவசமாகவும் மானிய விலையிலும் ரேஷன் கடைகள் மூலம் மாதம் மாதம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பீகார் மாநில அரசு ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீட்டை வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று(புதன்கிழமை) நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு பேசிய துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM – JAY) என்னும் திட்டத்தை பீகாரில் திட்டத்தை பீகார் மாநில அரசானது புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
Also Read > மும்பையில் ரூ.10 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை மிருனாள் தாகூர்..!
இந்த புதிய திட்டத்தின் மூலம் பீகார் மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் ரூ 5 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், இந்த திட்டத்தில் தற்பொழுது வரை சுமார் 1.2 கோடி மக்கள் பயனடைந்து வருவதாவும் இந்த ஆண்டில் மேலும் 58 லட்சம் மக்கள் இணைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் இரண்டு கோடிக்கும் மேலான மக்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in