கர்நாடகா, தமிழ்நாட்டிற்கு தண்ணிர் திறக்க மறுத்ததால், மேட்டூர் அணையின் நீர் வரத்து குறைந்தது. இதனால் டெல்டா பாசனத்திற்கு தேவையான நீர் இல்லாததால் குறுவை பயிர் காயும் நிலை உண்டானது. இதனால் முதல்வர் மு. க. ஸ்டாலின் குறுவைப் பயிர்களுக்கான நிவாரண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்திற்கு வினாடிக்கு 3000 கன கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட போதிலும் இதுவரை கர்நாடகா தண்ணீர் திறக்கவில்லை. மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்து வருகிறது.
டெல்டா பாசனத்திற்காக திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 6,500 கன அடியில் இருந்து 4000 கன அடியாக குறைந்துள்ளது. இதனால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது. இதனால் உடனே தண்ணீரை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இதனால் சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் கருகிய நெற்பயிர்களுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு 35,000 ரூபாயை நிவாரண தொகையாக வழங்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தி இருந்தது. இந்த நிலையில் தமிழக அரசால் குருவை சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இது பயிர்களுக்கு போதுமானதாக இல்லை.
இதனால், தற்போது டெல்டா மாவட்டங்களில் ஏறத்தாழ 40,000 ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே பாதிப்பு விவரங்கள் முறையாக கணக்கிடப்பட்டு இழப்பீடாக விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 13,500 ரூபாய் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
நன்றி
Publisher: jobstamil.in