தமிழ்நாடு, பஞ்சாப், மேற்கு வங்கம், தெலங்கானா போன்ற பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே தொடர்ச்சியான மோதல்போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதலளிக்காமல் ஆளுநர் வேண்டுமென்றே கிடப்பில் போடுகிறார் என்று, மாநில அரசு குற்றம்சாட்டுகிறது. மசோதாக்கள்மீதான ஆளுநரின் இத்தகைய செயல்களால், தமிழ்நாடு, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் ஆளுநருக்கெதிராக மனுக்கள் தாக்கல் செய்திருக்கின்றன.


இதில் பாஞ்சாப் மாநில அரசு, `ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில், மசோதாக்களுக்கு ஒப்புதலளிக்காமல் காலதாமதப்படுத்துகிறார்” என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது. பஞ்சாப் மாநில அரசின் இந்த மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த திங்களன்று விசாரித்தது.
நன்றி
Publisher: www.vikatan.com