நீக்கப்பட்ட சோஷியல் மீடியா போஸ்ட்டுகள் குறித்து டிசம்பர் 15-ம் தேதி ரூபா பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். எந்தக் காரணத்திற்காகவும், ரூபாவால் அந்தப் பதிவுகளை நீக்க முடியாவிட்டால், ரோகிணிக்கு எதிரான அறிக்கைகளைத் திரும்பப் பெறுவது குறித்துத் தெளிவுபடுத்தும் வகையில் ஒரு பதிவையாவது வெளியிட வேண்டும்.
முழு சர்ச்சைக்கும் முடிவுகட்ட விரும்புகிறோம். அதனால்தான் நாங்கள் இதை விசாரிக்கிறோம். பொழுதுபோக்கிற்காக உங்களது மனுவை விசாரிக்கிறோம் அல்லது உங்களுக்கு ஆதரவாக நடத்த முயல்கிறோம் என்ற அபிப்ராயத்தில் இருக்க வேண்டாம். நாங்கள் அதற்காக இதைச் செய்யவில்லை. மாநில நிர்வாகத்திற்காக நாங்கள் இதைச் செய்கிறோம்’ என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ரூபா – ரோகிணிக்கு இடையேயான மோதல்…
ரூபா, ரோகிணி சிந்தூரியின் சில படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து குற்றம்சாட்டி இருந்தார். பிப்ரவரி 18 சனிக்கிழமையன்று, ரோகிணியின் மீது 20 குற்றச்சாட்டுகள் கொண்ட ஒரு விரிவான ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டார்.
ஊழல், தனிப்பட்ட புகைப்படங்களை 3 ஆண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டது போன்ற குற்றச்சாட்டுகளை வரிசையாக அடுக்கி இருந்தார். சிந்தூரி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரி மாநிலத் தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்தார்.
நன்றி
Publisher: www.vikatan.com