அதன்பின்னர் நீதிமன்ற அமர்வு, “அரசியலமைப்புச் சட்டத்தின்படி, வழக்கை விசாரிப்பதற்கான அறிவுறுத்தல்களின் கீழ் நாங்கள் இருக்கிறோம். எனவே வழக்கறிஞரை அழைத்து எங்கள் முன் ஆஜராகச் சொல்லுங்கள்” என்று கூறியது. அதைத் தொடர்ந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் (video conferencing) நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டார். பிறகு, எந்தவொரு ஆவணமும், அறிவுறுத்தல்களை இல்லாமல் ஜூனியர் வழக்கறிஞரை அனுப்பியது ஏன் என்று வழக்கறிஞரிடம் கேட்ட நீதிமன்ற அமர்வு, அவருக்கு ரூ.2,000 அபராதம் விதித்தது.


இது குறித்து நீதிமன்ற அமர்வு தனது உத்தரவில், “ஒரு ஜூனியர் வழக்கறிஞர், எந்த ஆவணங்களும், அறிவுறுத்தல்களும் இல்லாமல் வாதத்துக்கு அனுப்பப்பட்டார். பின்னர், வழக்கை நாங்கள் ஒத்திவைக்க மறுத்தபோது, வழக்கறிஞர் ஆஜரானார். வழக்குகளை இதுபோன்று நடத்த முடியாது. இது நீதிமன்றத்துக்கும், எந்த ஆவணமும் இல்லாமல் ஆஜரான ஜூனியர் வழக்கறிஞருக்கும் அவமதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே இந்த வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தில் ரூ.2,000 டெபாசிட் செய்து அதற்கான ரசீதை சமர்ப்பிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com