“I.N.D.I.A கூட்டணி வலிமைபெற்று வருவதை எப்படிப் பார்க்குறீர்கள்?”
“ஆம் ஆத்மியும் காங்கிரஸ் கட்சியும் இப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள், சி.பி.எம் I.N.D.I.A கூட்டணியில் நீடிக்குமா என்பது சந்தேகமாகிவிட்டது. அந்தக் கூட்டணியிலிருக்கும் கட்சிகள் மாநிலத்தில் ஒரு நிலைப்பாடும் மத்தியில் ஒரு நிலைப்பாடும் கொண்டிருக்கின்றன. 100% முரண்பாடுகளைக் கொண்டிருக்கும் ஒரு கூட்டணியை வலிமையான கூட்டணி என மக்கள் ஏற்கமாட்டார்கள்.”
“பெண்களின் வாக்குகளைக் கவர்ந்திட பெயருக்கு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுகிறதே!”
“அரசியலமைப்பின்படி மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை என இரண்டையும் செய்தால்தான், அமல்படுத்தமுடியும். இப்போது விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் இந்த மசோதவைக் கொண்டுவர முயன்றன. ஆனால், அதில் அவர்கள் வெற்றி பெறவில்லை. நாடாளுமன்றத்துக்குள் இந்த மசோதாவுக்கு ஆதரவளித்துவிட்டு, வெளியில் வந்து எதிர்ப்பு தெரிவிப்பதற்கு… அவர்கள் உள்ளேயே எதிர்த்திருக்கலாமே.”
“தொகுதி மறுவரையறை நடந்தால், தமிழ்நாட்டில் 8 தொகுதிகள் குறையும் என்கிறார்களே?”
“வடக்கில் அதிக தொகுதிகள், தெற்கில் குறைவான தொகுதிகள் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு. செயல்வடிவம் பெறும் நேரத்தில் அதற்கு நான் நிச்சயம் குரல்கொடுப்பேன்.”
நன்றி
Publisher: www.vikatan.com