
சட்டப்பேரவையில் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று(திங்கட்கிழமை) தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, பெண்களின் முன்னேற்றத்திற்காக புதிதாக 10 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்படும் என்றும் இதன் மூலம் ஆயிரக்கணக்கான பெண்கள் பயனடைவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், முதல்வரின் விடியல் பயண திட்டத்தின் மூலம் இயக்கப்படும் பெண்களுக்கான இலவச பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதாவது, முதலில் 40 சதவீதமாக இருந்த நிலையில் தற்பொழுது 65 சதவீதமாக உயர்ந்துள்ளதால் இந்த திட்டத்திற்கு ரூ.3050 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும், ரூ.26 கோடி மதிப்பீட்டில் தொழில் நகரங்களான சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் 3 புதிய தோழி விடுதிகள் கட்டப்படும் என்றும் மதுரையை போலவே கோவையிலும் கலைஞர் பெயரில் மாபெரும் நூலகம் உருவாக்கப்படும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் மொத்தம் 1000 இடங்களில் Wifi சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in