மிக்ஜம் புயல் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. அதிலும் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் புயல், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் பலரின் உடைமைகள், பொருட்கள், வாகனங்கள், சான்றிதழ்கள் என அனைத்தும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது அல்லது தண்ணீரால் சேதமடைந்துவிட்டது. இதனால் பதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் போன்ற பல சலுகைகளை அரசு செய்து வருகிறது.
அதன் அடிப்படையில் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் அரசு ஏற்பாடு செய்துள்ளது. வெள்ள பாதிப்பினால் சான்றிதழ்களை இழந்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் நகல்களை வழங்க இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளது. உயர் கல்வி துறையால் உருவாக்கப்பட்ட www.mycertificates.in என்ற இணையதளத்தின் மூலம் கட்டணமின்றி சான்றிதழ் நகல்களை பெற்றுக்கொள்ளலாம்.
ALSO READ : தமிழக அரசின் ரூ.6000 நிவாரண தொகையுடன் மத்திய அரசும் நிவாரணம் கொடுக்குதா..? சற்றுமுன் கிடைத்த புதிய தகவல்!!
இழந்த சான்றிதழ் பற்றிய விவரங்களை மாணவ மாணவிகள் மேற்கண்ட இணையதள சேவையின் வாயிலாக பதிவு செய்யலாம். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட சான்றிதழ் நகல்கள், சம்பந்தபட்ட கல்லூரி அல்லது பல்கலைகழகங்களில் இருந்து பெறப்பட்டு சென்னையில் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
மேலும் இணையதளத்தில் சான்றிதழ் நகல் பதிவு பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால் கட்டணமில்லா அழைப்பு மையத்தை 180042450110 தொடர்பு கொண்டு சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளலாம்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in