மசோதாக்களைக் கிடப்பில்போட்டு, தமிழக அரசின் செயல்பாடுகளை ஆளுநர் முடக்குகிறார். 54 வழக்குகளில் அவர் நடவடிக்கையே எடுக்கவில்லை. கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோப்புகளில்கூட ஆளுநர் கையெழுத்திடவில்லை. எங்களின் கொள்கைமுடிவுக்கும், முன்னாள் அமைச்சர்கள்மீதான விசாரணைக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.
டி.என்.பி.எஸ்.சி-யில் தலைவர் பதவி உட்பட 14 பதவிகளில், 10 பதவிகள் காலியாக இருக்கின்றன. இப்படி இருந்தால், அரசு எப்படி இயங்க முடியும்… இது அரசின் உரிமைகளைப் பறிக்கும் விஷயம் என்பது ஒருபுறம் இருந்தாலும், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் செயல்” என்று வாதிடப்பட்டது.
இதனை கேட்ட தலைமை நீதிபதி, “தமிழக ஆளுநர் மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது தொடர்பாக அரசு முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. மசோதாமீது மாற்றுக் கருத்து இருந்து திருப்பி அனுப்புவதாக இருந்தால், உடனடியாகத் திருப்பி அனுப்ப வேண்டும். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்திவைக்க முடியாது” என்றார்.
அதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி அமர்வு, தமிழக அரசின் மனுவுக்கு பதிலளிக்க ஆளுநரின் செயலாளருக்கும் மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை வரும் 24-ம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டது. அன்றைய தினம் மத்திய அரசின் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்ற அமர்வு அறிவுறுத்தியிருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com