Rewind 2023 தமிழ்நாடு அரசியல்: ஆளுநருக்கு எதிரான தனித்

ஜனவரி 10: தமிழ்நாட்டின் ஆளுநரிடம் இருந்து வந்த பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக `தமிழகம்’ என்று இடம்பெற்றது. இது மிக பெரிய சர்ச்சையானது.

ஏப்ரல் 10: தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஏப்ரல் 14: பா.ஜ.க தலைவர் அண்ணாமலை DMK Files தி.மு.க ஊழல் குற்றச்சாட்டில் பிபிடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தனது ரஃபேல் வாட்ச் குறித்த சர்ச்சைக்கும் விளக்கம் அளித்தார்.

ஜூன் 14: அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

செப்டம்பர் 3: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்’சனாதன தர்மம் மலேரியா, கொரோனா போன்று ஒழிக்கப்பட வேண்டியது’ எனப் பேசியது தேசிய அளவில் சர்ச்சையானது.

செப்டம்பர் 14: மகளிருக்கான கலைஞர் உரிமைத் தொகைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

செப்டம்பர் 25: அ.தி.மு.க பா.ஜ.க-விலிருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தும் விலகிக்கொள்வதாக அறிவித்தது.

நவம்பர் 20:`அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் ஆகியோர்மீதான வழக்குகளில் குற்ற நடவடிக்கைக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்தார்.

நவம்பர் 26: ‘மிகுந்த அழுத்தங்களுக்கு இடையே உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம், முழுமைப் பெறாத ஆவணமாக இருக்கிறது’ என ஆளுநர் ஆர்.என் ரவி பேசியது சர்ச்சையானது.

பொன்முடி

டிசம்பர் 21: சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கும் அவரின் மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது நீதிமன்றம். இதனால் அவர் அமைச்சர் பதவியை இழந்தார்.

விஜயகாந்த் மரணம்

டிசம்பர் 28: நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *