தமிழக பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கவும், பாடங்களை சிரமம் இன்றி எளிமையாக கற்கவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில், மாணவர்கள் பாடங்களை எளிய முறையில் அறிந்து கொள்ள “மணற்கேணி” என்னும் செயலியை நேற்று தலைமை செயலத்தில் அன்பில் மகேஷ் துவக்கி வைத்தார். இந்த “மணற்கேணி” செயலியில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வைரயிலான பாடத்திட்டத்தில் உள்ள படாங்களும் அதற்கான விளக்கங்களும் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மாநில கவுன்சில் வழங்கி உள்ளது.
Also Read > வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்ட அமெரிக்காவின் தனியார் விண்கலம்..!
இவற்றின் முதற்கட்டமாக 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அறிவியல், கணிதம், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடப்பிரிவுகளில் உள்ள பாட பொருட்கள் அனைத்தும் வீடியோவாக உள்ளது. இதனை மாணவர்கள் எளிமையாக அறிந்துகொள்ள முடியும். மேலும், அந்த வீடியோவில் மாணவர்களுக்கு வினாடி வினாவும் கேள்விகளும் கேட்கப்படும். இதன் மூலம் மாணவர்களின் புரிதல் திறனை சரிபார்க்க முடியும். இந்த வீடியோக்கள் அனைத்தும் 2D மற்றும் 3D அனிமேஷன் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இந்த செயலியை என்ற இணையத்தளத்தின் மூலமாகவும் அல்லது பிளே ஸ்டோரில் “TNSED Manarkeni” என டைப் செய்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in