குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் முதல் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்து வந்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொடர்ந்து பெய்து வரும் கனமழை மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், திருநெல்வேலியில் பேருந்து நிலையத்தில் இருந்து சிந்துபூந்துறை செல்லும் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ALSO READ : தமிழக அரசு பேருந்துகளில் அதி நவீன டிக்கெட் கருவிகள்..! 38 ஆயிரம் கருவிகளை இலவமாக வழங்கும் SBI…
இந்நிலையில், மழை வெள்ளத்தால் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 மாவட்ட்டங்களில் இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in