தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. அதிலும் குறிப்பாக ஜவுளி கடைகள், பட்டாசு கடைகள் மற்றும் பேக்கரிகளில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது. அந்த வரிசையில், தற்பொழுது பூக்கடைகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பொதுவாக பண்டிகை காலங்களில் பூக்களின் விலையானது பலமடங்கு உயர்ந்து இருக்கும்.
அந்த வகையில், தற்பொழுது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே பூக்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும் அதிக அளவில் வருகை தருகின்றனர்.
ALSO READ : தியேட்டர்களில் உயர்த்தப்பட்ட டிக்கெட் விலை இன்று முதல் அமல்..!
பூக்களின் விற்பனை அதிகரித்துள்ளதால் பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, மல்லிகை பூ கிலோ ஒன்றுக்கு 700 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. பிச்சிப்பூ கிலோ ஒன்றுக்கு 350 ரூபாயிலிருந்து 1250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், கனகாமரம் ஒரு கிலோ 1000 ரூபாய்க்கும், செவ்வந்தி ஒரு கிலோ 170 க்கும், ரோஜா ஒரு கிலோ 100 க்கும், மரிக்கொழுந்து ஒரு கிலோ 100 க்கும், அரளி 80 ரூபாய்க்கும் சம்பந்தி ஒரு கிலோ 30 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in